Homeசெய்திகள்சென்னைமீனவ மக்கள் சாலை மறியல் - சாலையில் படகுகளை வைத்து போராட்டம்

மீனவ மக்கள் சாலை மறியல் – சாலையில் படகுகளை வைத்து போராட்டம்

-

கொசஸ் தலை ஆற்றில் படர்ந்து வரும் எண்ணெய் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி மீனவ மக்கள் சாலை மறியல்

மீனவ மக்கள் சாலை மறியல் - சாலையில் படகுகளை வைத்து போராட்டம்

சென்னை எண்ணூரில் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மண்டல அலுவலகம் அருகே மீனவ மக்கள் சாலை மறியல் போராட்டம் .சாலையில் படகுகளை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் பெய்த கனமழையினால் மழை நீரில் அடித்து வரப்பட்ட எண்ணெய் கழிவுகளால் கொசுத்தலை ஆறு எண்ணெய் படலமாக காட்சியளிக்கிறது.இதனால் எண்ணூரில் சிவன் படை வீதி, ராமமூர்த்தி நகர், காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஆற்றில் தொழில் செய்யாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மீன்கள், இறால்கள், நண்டுகள் இறந்து மிதப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மழை நின்று இயல்பு நிலையை திரும்பிய போதும் கொசத்தலை ஆற்றில் வரும் எண்ணெய் கழிவுகளை நிறுத்தாமல் எண்ணெய் நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.அதிகாரிகள் இப்பகுதிகளை பார்வையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் கத்திவாக்கம் நெடுஞ்சாலை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு சாலையில் படகுகளை வைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் நேரடியாக வந்து தங்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் என கோரிக்கை வைத்து ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ