தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான மாற்றம் நகைப் பிரியர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தென்னிந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு தங்கம் மிகவும் பிடித்த ஆபரணம் என்றாலும் அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தங்கம் மீது அதிகம் பிரியம் என்பது யாவரும் அறிந்ததே. தங்கத்தின் மீது முதலீடு செய்வது நடுத்தர வர்க்கத்தினர் சிறந்த பாதுகாப்பாக கருதுகின்றனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 22-ல் தேதி அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை அதிரடியான ஏற்றம் கண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையின் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.45,760ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் 44 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,720 ரூபாய் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 அதிகரித்து, ஒரு கிராம் 83 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மென்மேலும் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் பெண்கள் நகைக் கடைக்கு படையெடுப்பதால் இதை சாதகமாக பயன்படுத்தி தங்கத்தின் விலையை வியாபாரிகள் உயர்த்துவதாக கூறப்படுகிறது.