தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.
தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு விலையேற்றம் கண்டிருக்கிறது.
உயர்ந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாயும் சவரனுக்கு 880 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து 5,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதைப்போல் சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்து 44,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தங்கம் சவரனுக்கு 44,040 ரூபாய்க்கு விற்பனையானது. அதைவிட இன்றைய நிலவரப்படி 880 ரூபாய் விலை உயர்ந்து 44,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையானது கடந்த பத்து நாட்களாகவே தொடர் ஏற்றத்தில் இருந்து வருகிறது. அதன் காரணம் அமெரிக்காவில் மிகப்பெரிய இரண்டு வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மைய வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தி கொண்டே இருப்பதால் அவர்கள் செய்த முதலீடுகளில் சில இழப்புகள் ஏற்பட்டு திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதுவே தங்கம் வரலாறு காணாத விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சாதாரணமாகவே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தான் எப்போதும் தேர்வு செய்வார்கள். அதன்படி தங்கத்தின் முதலீடுகள் அதிகரிப்பதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த பத்து நாட்களில் சென்னையில் மட்டும் 2,500 ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மேலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.