Homeசெய்திகள்சென்னை15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்

15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்

-

15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Radhakrishnan

சென்னை புதுப்பேட்டை அருகே உள்ள கூவம் பகுதியில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பைகள் அடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதனை ராதாகிருஷ்ணனே இறங்கி சுத்தம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில், இவை அடைப்பை ஏற்படுத்தும்போது ஏதோ ஒரு இடத்தில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும். புதுப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டுவதை காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்தால் பறிமுதல் செய்யப்பட்டும். இதுபோன்ற குப்பைகள் கொட்டாமல் இருப்பதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கார்கள் பழுது பார்ப்பதற்கு தனியாக இடம் வழங்கப்படும். காரின் இடி பொருட்கள், கட்டிடக்கழிவுகள் அனைத்தும் கூவத்தில் கொட்டப்படுகிறது. தெருக்கள் ஓரமாக குப்பைகள் கொட்ட கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்படும். 12 இடங்களில் இதுபோன்ற சுகாதார சீரற்ற நிலையில் இருக்கிறது” எனக் கூறினார்.

 

MUST READ