வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளான புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினாா்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4.12.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளான புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை இன்று (30.12.2024) சென்னை, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்டு, துரிதமாக நடைபெற்று வரும் 700 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தங்கசாலை மேம்பாலம் அருகில் துரிதமாக நடைபெற்று வரும் 776 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மேலும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 5, வார்டு 57, சவுக்கார்பேட்டை, டேவிட்சன் தெருவில் இடிந்த நிலையில் உள்ள பழைய பத்திரப் பதிவு அலுவலக கட்டிடத்தை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் திரு.ஸ்ரீராமுலு, செயற்பொறியாளர் திரு.லோகேஷ்வரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சேர்ந்த திரு.முரளி, திரு.ராஜசேகர், திரு.ராம்மூர்த்தி, திரு.கதிரவன், திரு.பரத், திரு.கவியரசு ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை: காவல்துறை அறிவிப்பு


