Homeசெய்திகள்சென்னைகலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1000 பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி உயர் வகுப்பு மாணவிகள் 1000 பேர் கையில் பூங்கொத்துக்களுடன் 1000 என்ற எண்ணை பள்ளி மைதானத்தில் வடிவமைத்தார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

மேலும் 1000 கிலோ ரோஜா மற்றும் சாமந்தி மலர்களைக் கொண்டு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வருக்கு நன்றி” என்ற வாசகங்களையும் அமைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதியை அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். அதில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இதில் ஒரு கோடிக்கு மேல் மகளிர் பயனடைந்துள்ளனர்.

இந்த திட்டமானது பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய குடும்பங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகையானது ஒரு மறுமலர்ச்சி திட்டமாக பார்க்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

18 மணி நேரம் உழைக்கும் மகளிருக்கு பொருளாதார அடிப்படையில் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது இத் திட்டம்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கியது, முதல் நான் முதல்வன் திட்டம் மற்றும் மகளிருக்காண கட்டணமில்லா பேருந்து திட்டம் அதன் தொடர்ச்சியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமும் தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதனால் பயனடைந்த மகளிர் அனைவரும் முதலமைச்சரை வாழ்த்துகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக குறைகளை கூறுகிறார் என செய்தியாளர்களின் கேள்விக்கு?

அமைச்சர் பதில்:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

அவருக்கு எப்பவுமே குறை கூறுவது தான் வேலை. இது சமூகத்தில் பொருளாதார ரீதியாக கீழே இருக்கக்கூடிய மகளிருக்கு உதவுகின்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.  இதில் பயனடைந்த அனைவரும் முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.

MUST READ