Homeசெய்திகள்சென்னைமெரினா வான் சாகச நிகழ்வு... உடல்நல குறைவால் 4 பேர் உயிரிழப்பு

மெரினா வான் சாகச நிகழ்வு… உடல்நல குறைவால் 4 பேர் உயிரிழப்பு

-

- Advertisement -

சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியைக் காணச்சென்றபோது, வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்திய விமானப்படை தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வான் சாகச நிகழ்ச்சியை காண சென்றபோது வெயிலின் தாக்கம் காரணமாக 200க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 93 பேர் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வெயிலின் தாக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருங்களத்துரை சேர்ந்த சீனிவாசன், திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56) உள்ளிட்ட 4 பேர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளனர்.

MUST READ