spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇந்தியா - இங்கி., 2வது டி20 போட்டி: ஜனவரி 25ல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

இந்தியா – இங்கி., 2வது டி20 போட்டி: ஜனவரி 25ல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

-

- Advertisement -

சென்னையில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியை முன்னிட்டு அன்றைய தினம் மின்சார ரயில் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

train

we-r-hiring

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி இங்கிலாந்து – இந்தியா மோதும் டி20 போட்டி நடக்க உள்ளதை ஒட்டி சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் 10 மணிக்கு புறப்படும் என்றும், கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மறுமார்க்கத்தில் வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிக்கப்பட்டு உள்ளது

MUST READ