அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை பயன்பாட்டு மின்கட்டண உயர்வை கண்டித்து ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 98 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி தரும் சிறு குறு தொழிற்சாலைகளின் மின்கட்டண உயர்வை கண்டித்து, தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க 7அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அம்பத்தூர் தொழிற்பேட்டை,பாடி வில்லிவாக்கம், திருமுல்லைவாயில் சிப்காட், திருமுடிவாக்கம் உட்பட 2 லட்சத்து 80 ஆயிரம் தொழிற்சாலைகள் ஒரு நாள் கதவடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அம்பத்தூர் அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் (ஏய்மா) வில் மட்டும் சுமார் 2000 தொழிற்சாலைகள் இன்று நடைபெறும் ஒரு நாள் கதவடைப்பில் பங்கேற்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 169 தொழிற்சாலை அசோசியேசன்கள் மூலம் 2 லட்சத்து 80 ஆயிரம் தொழிற்சாலைகள் இந்த ஒரு நாள் கதவு அடைப்பில் ஈடுபடுகின்றனர். இதில் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் 380 கோடி ரூபாய்க்கு வணிகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு 7அம்ச கோரிக்கைகள்
- குடிசை மற்றும் சிறு குறு மிண்கணக்கு ஒருவருக்கு 12 கிலோவாட் டாரிப் அடிப்படையில் மின் இணைப்பு அளிக்கப்பட வேண்டும்.
- தாழ் வழுத்த நிலை மிண் கட்டணமாக எல்பி பிக்சட் சார்ஜஸ் வழங்கப்பட வேண்டும் எனவும்,
0.12 கிலோ வாட் ஏ ஒன் டேரிபில் பழைய கட்டணம் 20 ரூபாயிலிருந்து 72 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,
0-50 கிலோ வாட் டேரிபில் பழைய கட்டணம் 35 ரூபாயிலிருந்து 72 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,
50-112 கிலோ வாட் டேரிபில் பழைய கட்டணம் 35 ரூபாயிலிருந்து 153 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,
112- 150 கிலோ வாட் டேரிபில் பழைய கட்டணம் 350 ரூபாயிலிருந்து 562 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,

சொல்லி அடித்த அட்லீ….. 1000 கோடியை வேட்டையாடிய ‘ஜவான்’!
- உயர் மின்னழுத்த கேட்பு கட்டணமாக பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்பின் தற்போது வசூலிக்கப்படும் ரூபாய் 562/ கிலோ வாட் முந்தைய கட்டணம் 350 / கிலோ வாட் ஆக குறைக்கப்பட வேண்டும் எனவும்,
4.பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய காலை மாலை அதிக பயன்பாடு உள்ள நேரம் 8 மணி நேரத்திற்கு 15% கட்டணம் கூடுதலாக உள்ளதாகவும், அதில் 20 இருந்து 25% உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,
- வருடா வருடம் 1% சதவீத மின்கட்டணம் உயர்வு இருத்தல் வேண்டும் எனவும்,
6.அதேபோல் ரூப்டாப் சோலார் நெட்வொர்க்கிங் சார்ஜஸ் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் எனவும், இதனால் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குவதாகவும்,
“மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக”- அண்ணாமலை வலியுறுத்தல்!

- 112 லிருந்து 150 கிலோ வாட் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த ஒரு நாள் அடையாள தொழிற்சாலை அடைப்பு நிகழ்ந்து வருகிறது என அம்பத்தூர் தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சாலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜி.அரவிந்த் தெரிவித்தார்.


