- Advertisement -
கத்தார் நாட்டு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கம்
கத்தார் நாட்டில் இருந்து இந்தோனேசியாவுக்கு சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து இந்தோனேஷியா தலைநகரம் ஜகார்த்தா புறப்பட்ட விமானத்தில் விமானிகள் ஊழியர்கள் 356 பயணிகள் உட்பட 368 பேர் இருந்தனர்.

39 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை எடுத்து விமானத்தை தரையிறக்க முடிவு செய்த விமானி சென்னை சர்வதேச விமான நிலையம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அனுமதி கேட்டார்.
இதனை அடுத்து டெல்லியில் அனுமதி பெற்று கத்தார் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

விமானம் தரை இறங்கியதும் விமானத்தை சரி செய்யும் பணி ஆறு மணி நேரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் கத்தார் விமானம் ஜகார்த்தா புறப்பட்டு சென்றது.


