சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, ஜனநாயகன் குறித்த கேள்வி எழுந்த போது, அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் தவிர்க்குமாறு சரத்குமார் காட்டமாக பதில் அளித்தார்.


2026 சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கிகொண்டிருக்கும் வேலையில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் பாலம், ஏகாம்பரர் தெரு , மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை கேட்க பொதுமக்கள் யாரும் பெரிதளவில் ஆர்வம் காட்டாததால் பாஜக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முன்னதாக பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகம் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகிறது என்றால் அதனை திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
மேலும் இத்திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு ஒன்றிய அமைச்சர் எல் முருகன் தான் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது என்று அவர் கூறினார். தான் நடிப்பில் உருவான ஜக்குபாய் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான போது திமுக ஆட்சியில் இருந்ததாகவும் ஆனால் அப்போது தான் திமுகவை குற்றம் சாட்ட வில்லை என்று அவர் தெரிவித்தார் . ஜனநாயகம் திரைப்படத்தால் மக்களுக்கு எந்த பிரச்சணைகளும் தீராது என்று கூறிய அவர் , அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்குமாறு காட்டமாக பதில் அளித்தார்.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் பாலம் பகுதியில் சரத்குமாரின் பிரச்சாரக் கூட்டத்தின் போது பொதுமக்கள் பெரிதளவில் திரளாத காரணத்தால் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் முன்னே பரப்புரை மேற்கொண்டு சென்றார்.
வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….
