spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது!

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது!

-

- Advertisement -

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது. இதில் தமிழ் பிரிவில் சிறந்ததாக 12 படங்கள் தேர்வாகியுள்ளது. உலக சினிமாவுக்கு தேர்வான 12 படங்களில், 2 இந்திய படங்கள் (தெலுங்கு & மலையாளம்) இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் 57 நாடுகளில் இருந்து சுமார் 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது!

we-r-hiring

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் நடக்கும் 21 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் அதில் திரையிடப்படும் திரைப்படங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது.

சர்வதேச திரைப்பட விழாவின் பொது செயலாளர் தங்கராஜ் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட ஜூரி உறுப்பினர்கள் தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜூரி உறுப்பினர்கள் கூறுகையில், “ 21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல் துவங்கி டிசம்பர் 21 வரை நடக்கிறது. இதன் துவக்க நிகழ்ச்சி ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் துவங்க இருக்கிறது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளில் இருந்து 126 திரைப்படங்கள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு ( 500 க்கும் மேற்பட்ட படங்கள் இந்த திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டு அதில் இருந்து ஜூரி மூலமாக 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டு ) திரையிடப்பட இருக்கிறது.

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது!

இந்த திரைப்படங்களில் தமிழ் படங்களில் 25 படங்கள் அனுப்பப்பட்டு அதிலிருந்து சிறந்ததாக 12 படங்களும், உலக சினிமாவில் 12 படங்களும் , இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளது.

தேர்வான 12 தமிழ் படங்கள்

  1. வசந்தபாலனின் ‘அநீதி’
  2. மந்திரமூர்த்தியின் ‘அயோத்தி’
  3. தங்கர் பச்சனின் ‘கருமேகங்கள் கலைகின்றன’
  4. மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’
  5. விக்னேஷ் ராஜா டி, செந்தில் பரமசிவம் ஆகியோரின் ‘போர் தோழில்’
  6. விக்ரம் சுகுமாரனின் ‘ராவண கோட்டம்’
  7. அனிலின் ‘சாயவனம்’
  8. பிரபு சாலமனின் ‘செம்பி’
  9. சந்தோஷ் நம்பிராஜனின் ‘ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’
  10. கார்த்திக் சீனிவாசனின் ‘உடன்பால்’
  11. வெற்றிமாறனின் ‘விடுதலை’
  12. அமுதவாணனின் ‘விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3’

உலக சினிமாவில் தேர்வான 12 படங்களில் 2 படங்கள் இந்தியாவை சேர்ந்தது.

  1. பாலகம் : வேணு யெல்டான்டியின் குழு ( தெலுங்கு)
  2. மனஸ் : பாபு திருவல்லா எழுதிய மனம் ( மலையாளம்)

அத்துடன் தமிழ் சினிமாவில் தேர்வான 12 படங்களில் இருந்து 3 படங்கள்  சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டு 7 லட்சம் ரூபாய் பரிசு ( முதல் 3 இடங்களை பெறும் படங்களுக்கு) மற்றும் உலக சினிமாவில் சிறந்த 3 படங்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்த படங்களை பொறுத்தவரை 2022 அக்டோபர் 16 முதல் 2023 அக்டோபர் 15 வரை சென்சார் செய்யப்பட்ட படங்கள் ( போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்கள்) 25 படங்களில் இருந்து 12 படங்களை ஜூரி உறுப்பினர்கள் ( தமிழில் இயக்குநர் மோகன் ராஜா) , உலக சினிமாவில் (யூகி சேது)  ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும் இந்த திரைப்பட விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு வெளிநாட்டு தூதரகங்கள், இயக்குனர்கள், திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்த திரைப்படங்களின் தேர்வுக்கு தமிழ் படங்கள் அனுப்ப கட்டணம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தனர்.

MUST READ