டி.எம்.எஸ். சாலை – பெயர் பலகை திறப்பு
மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையிட்டு அவரது பெயர் சூட்டப்பட்ட சாலையில் பெயர் பலகையும் முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
தனது குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம் பெற்ற பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மந்தைபுள்ளியில் அவர் வசித்து இல்லம் அமைந்துள்ள மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த சாலையின் பெயர் பலகை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை ஆகியவற்றை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.