Homeசெய்திகள்சென்னைவேளச்சேரி - கடற்கரை இடையேயான ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம்

வேளச்சேரி – கடற்கரை இடையேயான ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம்

-

வேளச்சேரி – கடற்கரை இடையேயான ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கடற்கரை, சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

Image

கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை புதிய ரயில் பாதை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே வேளச்சேரி – கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே பயணிகள் வசதிக்காக சிந்தாதரிப்பேட்டை ரயில் நிலையத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, எழும்பூர், சென்ட்ரலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எழும்பூர் – கடற்கரை ரயில் நிலையம் இடையே 4வது வழித்தடம் அமைப்பதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக, அடுத்த 7 மாதங்களுக்கு கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இனி, பறக்கும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் என ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ