spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமெரினாவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு!

மெரினாவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு!

-

- Advertisement -

மெரினாவில் சோக சம்பவம் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு. கடலில் மிதந்த சடலங்களை அந்த பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மெரினா போலீசார் விசாரணை

மெரினாவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு!சென்னை நடுக்குப்பத்தை சேர்ந்த பாஸ்கர்( 61), ராஜி(35) இருவரும் இன்று அதிகாலை கட்டுமர படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். காலை 07 – 00 மணியவில் இவர்கள் சென்ற படகு மற்றும் வலை ஆகியவை விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.

we-r-hiring

இதையடுத்து கரையோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் கடலுக்குள் படைகள் சென்று இருவரையும் தேட ஆரம்பித்தனர். கடலில் மிதந்து கொண்டிருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு 9 மணிக்கு கரைக்கு கொண்டு வந்தனர்.

மெரினா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து இருவரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

MUST READ