spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்

எனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்

-

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், அமெரிக்காவில் இருவரும் சந்தித்து கொண்டதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் முதன் முறையாக மவுனம் கலைத்துள்ளார் அனிருத்.

we-r-hiring

தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இதுவரை அஜித், விஜய், கமல் , ரஜினி உள்பட ஏராளமான பிரபல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த பல ஆண்டுகாலமாகவே அவரது காதல், திருமணம், டேட்டிங் பற்றிய வதந்திகள் ஊடகங்களில் அதிகம் வெளியாகி சில மாதங்களில் அது காணாமல் போகும்.

இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதுமே ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது அனிருத், காவ்யா மாறன் காதல் திருமணம் குறித்த செய்திகள்தான். உள்ளூர் ஊடங்கங்கள் மட்டுமல்லாது வட இந்திய ஊடகங்களிலும் திருமணம் தொடர்பான செய்திகள் பரவலாக வெளியாகின. இதனை இருவருமே மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை.

இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் அனிருத் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில், ” கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அனிருத் இப்போது தமிழில் மட்டும் பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2, விஜய்யின் ஜன நாயகன், பிரதீப் ஆண்டனியின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களாகும். இந்த சூழ்நிலையில்தான் தனது திருமண செய்திக்கு பதிலளித்துள்ளார் அனிருத்.

அனிருத்தின் இந்த பதிவு பலருக்கும் தெளிவை தந்துள்ளது.. அத்துடன் நிலவி வந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளியையும் வைத்துள்ளது என்றே நினைக்கலாம்.

MUST READ