தேசிய விருது பெற்ற ”குற்றம் கடிதல்” படத்தின் 2 ஆம் பாகத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ”குற்றம் கடிதல்” என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேச திரைவிழாக்களில் பங்கேற்று அங்கீகாரம் பெற்ற இப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும் வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து தேசிய விருது பெற்ற”குற்றம் கடிதல்” படத்தின் 2 ஆம் பாகத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. ஓய்வுபெறவுள்ள ஒரு பள்ளி ஆசிரியரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. ஜே.எஸ்.கே.சதீஷ் இப்படத்தை தயாரித்து, நடித்ததோடு எஸ்.கே.ஜீவா என்பவருடன் இணைந்து இயக்கியும் உள்ளாா். இதில் பாண்டியாரஜன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
