spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

-

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்த நடிகை ரிஹானா பேகம். ராஜ் கண்ணன் என்பவர் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக குறைதீர் முகாமில் பங்கேற்று கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் புகார் அளித்தார்.குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

சென்னை அடுத்த பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்தவர் ரிஹானா பேகம். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கும் ராஜ் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு,பின்னர் காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் மீது ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார்.

we-r-hiring

இதனை முற்றிலும் மறுத்துள்ள ரிஹான பேகம் ராஜ் கண்ணன் மீது புகார் அளித்தும் இதுவரை பூந்தமல்லி காவல் நிலையத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்று கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட கூடுதல் ஆணையர் சம்பந்தப்பட்ட அதிகாரியை வர சொல்ல முகாமில் காவல் ஆய்வாளர் இல்லாததால் பூந்தமல்லி காவல்துறை அதிகாரிகள் மீது காட்டம் காட்டினார். உடனடியாக இது குறித்து விசாரணை செய்து அடுத்த குறைதீர் முகாமில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் ஊடகங்களில் தன்னை தவறாக சித்தரித்து செய்திகள் வெளியாகியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் அவ்வாறு செய்யவில்லை. என் தோழி மூலமாக அறிமுகமான ராஜ் கண்ணன் என்னுடைய சிறிய வயது முதல் கஷ்டபட்டு உழைத்த பணத்தை ரெஸ்ட்ரோ பார் துவங்க முதலீடாக பெற்று அதில் வருமானம் ஏதும் காட்டாமல் நஷ்டம் அடைந்து விட்டதாக கூறி 15 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டார். இதனை கேட்கவே தான் என் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து என்ன அசிங்கப்படுத்தி வருகிறார்.

ஆனால் ராஜ் கண்ணன் என்பது அவரது போலி பெயர் உண்மையான பெயர் அழகர் சாமி என அதிர்ச்சியை கிளப்பினார்.அழகர் சாமி எனும் பெயரில் பல காவல் நிலையங்களில் புகார் உள்ளது. இதனை மாற்றி தனது பெயரை ராஜ் கண்ணன்  என மாற்றி கொண்டு அதற்கு ஆதார்,பான் என பல்வேறு அடையாள அட்டைகளை பெற்று பெண்களை ஏமாற்றி வருகிறார் என பகீர் கிளப்பி உள்ளார். தொடர்ந்து பேசியவர் ராஜ் கண்ணன் திருமணமாகி SINGLE PARENTS இருக்கும் பெண்களை குறிவைத்து வலை வீசி அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உடல் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் கபலீகரம் செய்து வருகிறார். இந்த சூழலில் தான் தெரியாமல் தான் மாட்டிக்கொண்டு எனது பணத்தை இழந்தேன் என கூறியவர்,எனக்கு தெரியாமலே எனக்கு தாலி கட்டி விட்டு உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி கொடுமை படுத்தியதாக வேதனை தெரிவித்துள்ளார்.இதற்கு ஒத்துழைக்கததால் தான் பணம் ஏமாற்றி விட்டதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து எனது பெயரை களங்கம் செய்து வருகிறார்.

குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

ரெஸ்ட்ரோ பாரில் முதலீடு செய்வதாக 15 லட்சம் பணம் பெற்று அந்த தொழிலையும் சரிவர செய்யாமல் ஏமாற்றி வந்ததால் எனது பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்து கேட்ட நாளிலிருந்துதான் பிரச்சனை செய்து வருகிறார் என குற்றம்சாட்டினார்.

மேலும் ராஜ்கண்ணன் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார். வீட்டில் கத்தி, கொக்கைன் போதை பொருட்கள் கள்ள சந்தையில் கிடைக்க கூடிய போதை பொருட்கள் எல்லாம் வைத்து கொண்டு மிரட்டி விடுகிறார். அதுமட்டுமின்றி இலங்கை பெண் ஒருவரை எந்த வித அடையாள ஆவணங்கள் இல்லாமல் உடன் வைத்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இது போன்று பல்வேறு பெண்களை வைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகின்றார். இதன் மூலம் தான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து மேலும் பணம் உடைய அழகான திருமணமாகி கணவருடன் இல்லாத பெண்களை குறிவைத்து காதல் வலை வீசி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக வைத்தார்.குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகை விஜயலட்சுமி பிரச்சனை ஏற்பட்டபோது சீமானை டார்கெட் செய்து அவரிடம் பணம் பறிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இளம் பெண்களுடன் சீமானை தொடர்பு படுத்தி அதனை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பல்வேறு புது ரகசிய தகவல்களை வெளியிட்டார்.

இது மட்டும் இல்லாமல் ராஜ் கண்ணன் சின்னத்திரை பிரபல நடிகை மின்னல் தீபாவுடன் பழகி வந்து அவரது விவகாரத்திற்கு காரணமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது ஷீலா என்ற பெண்ணை ஏமாற்றி பணம் பறித்து வருவதாகவும் அவரை உடல் ரீதியாக பணப்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதே போன்று அவருடன் இருந்த புகைப்படம்,சாட்டிங்,ராஜ் கண்ணன் பேசிய வாய்ஸ் மெசேஜ் என பல்வேறு ஆதாரங்களை செய்தியாளர்களிடம் காட்டி தான் எந்த வித தவறும் செய்யாமல் பணத்தை இழந்து, எனது பெயர்,நடிகை வாழக்கை வேலை என அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்பதாக வேதனை தெரிவித்தார்.குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

 

ஊடகங்கள் முறையான விசாரணை நடத்தி யார் மீது தவறு உள்ளது என வெளியிட வேண்டும், எதையும் விசாரிக்காமல் குழந்தையை வைத்து கொண்டு வாழ்க்கையில் போராடி வரும் தன்னை போன்ற பெண்களை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பூந்தமல்லி காவல் துறை முறையாக இந்த வழக்கை விசாரிக்காமல் ஒருதலை பட்சமாக நடந்துகொள்வதாகவும்,ராஜ் கண்ணன் மற்றும் பாதிக்கப்பட்ட என்னையும் அழைத்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12 ஆண்டு கால காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது – ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி

MUST READ