”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி வயதுமூப்பு காரணமாக காலமானாா். இதற்கு பல்வேறு தலைவா்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான தமது இரங்கலையும் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”என்னைப் பார்க்கும் இடமெல்லாம் என்னுடைய எந்த வயதிலும் கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர் மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்” என் உருக்கமாக கூறியுள்ளாா்.
- Advertisement -