காப்புரிமை விவகாரம் – மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையை ஒத்திவைத்த நிதிபதிகள். இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு கடந்த 2022ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி மியூசிக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரி இளையராஜா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு அமராத காரணத்தினால் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்தது.
அதன்படி, நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி நாளை மும்பை உயர்நீதிமன்றத்தில் காப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரையுள்ள நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதிகள் இளையராஜாவின் மனுவை வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.
கூட்டணிக்கு அதிக சீட்? ஸ்டாலின் ரூட் கிளியர்! குட்டையை குழப்பிய எடப்பாடி!