spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா‘வாட்டர்மிலன் ஸ்டார்’ நடித்து காட்டிய கஜினி பட சீன்… ரீகிரியேட் செய்த சூர்யா…

‘வாட்டர்மிலன் ஸ்டார்’ நடித்து காட்டிய கஜினி பட சீன்… ரீகிரியேட் செய்த சூர்யா…

-

- Advertisement -

கஜினி படத்தில் வாட்டா் மிலனை  சாப்பிட்டுக் கொண்டே தனது உதவியாளா்களை கண்ணாலேயே சைகை காட்டி நடிகா் சூர்யா அங்கிருந்து போக சொல்லும் காட்சியை சூர்யாவே ரீகிரியேட் செய்திருக்கிறார்.‘வாட்டர்மிலன் ஸ்டார்’ நடித்து காட்டிய கஜினி பட சீன்… ரீகிரியேட் செய்த சூர்யா…இன்றை காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் எவரும் இல்லை. சினிமாவில் நுழைய பலருக்கும் விருப்பம் உள்ளது. அதற்கு இந்த ஸ்மாா்ட் போன் கை கொடுக்கின்றன. அதில் வரும் ஃபேஸ்புக், யுடியூப், டிக்டாக் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் அவரவா் தங்களது திறமைகளை காட்டி வீடியோ எடுத்து பிரபலமாகின்றாா்கள். இதன் மூலம் அவர்கள் பணமும் சம்பாதிக்கிறாா்கள்.

அதில் சிலருக்கு சினிமாவில் வாய்ப்பும் கிடைத்தது. அதோடு, யுடியூப்பில் அந்த வீடியோக்களை நிறைய பேர் பார்ப்பதால் அதில் வரும் விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. எனவே, பலரும் அது போல நாமும் வரவேண்டும் என்கிற ஆசையில் சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.‘வாட்டர்மிலன் ஸ்டார்’ நடித்து காட்டிய கஜினி பட சீன்… ரீகிரியேட் செய்த சூர்யா…அதில் திவாகரும் ஒருவர். இவர் சிவாஜி உள்ளிட்ட நடிகர்களை போல நடித்துக்காட்டுகிறேன் என சொல்லி முகத்தை அஷ்டகோணலாக வைத்து கண்றாவியான ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார். அது சிறந்த நடிப்பு என அவரே சொல்லிக்கொள்வார். எனவே, இவரை பலரும் ட்ரோல் செய்வதுண்டு. ஆனால், அதையெல்லாம் திவாகர் கண்டுகொள்வது இல்லை. இத்தனைக்கும் இவர் ஒரு மருத்துவரும் கூட.

we-r-hiring

கஜினி படத்தில் தர்புசணியை சாப்பிட்டுகொண்டே தங்களின் உதவியாளர்களை கண்ணாலேயே சைகை காட்டி சூர்யா அங்கிருந்து போக சொல்லும் காட்சியை எங்கு போனாலும் சுதாகர் நடித்து காட்டி ‘வாட்டர்மிலன் ஸ்டார்’ என தானே தனக்கு பட்டம் கொடுத்துக்கொண்டார். இந்நிலையில்தான் கருப்பு படத்தில் கஜினி படத்தில் வரும் அந்த காட்சியை சூர்யாவே ரீகிரியேட் செய்திருக்கிறார்.

அனேகமாக தன்னால்தான் அந்த காட்சி பிரபலமாகியிருக்கிறது. அதனால்தான் சூர்யாவே மீண்டும் அப்படி ஒரு காட்சியில் நடித்திருக்கிறாா் என வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு…

MUST READ