அஜித் – ஷாலினியின் திருமண நாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் மற்றும் ஷாலினியின் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் திரைப்படம் வெளியானது. இந்த படப்பிடிப்பின் போது அஜித் – ஷாலினி இருவருக்கும் காதல் மலர இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டில் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அஜித் – ஷாலினி இருவரும் திரைத்துறையில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருவதோடு மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றனர். இது தவிர அஜித் நடிப்பதிலும், கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தவறவிடுவதில்லை. அந்த வகையில் படப்பிடிப்பில் இருக்கும் போதும் தனது மனைவி, மகன், மகளுக்காக பிரேக் எடுத்துவிட்டு உடனே வந்துவிடுவார். மேலும் துபாய், இத்தாலி, பெல்ஜியம் போன்ற இடங்களில் நடந்த கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் அஜித். அடுத்தடுத்த ரேஸ்களில் கலந்து கொள்ளவும் தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் அஜித் – ஷாலினியின் 25வது திருமண நாளான நேற்று (ஏப்ரல் 24) ரேஸ் களத்திலிருந்து சென்னை திரும்பினார் அஜித்.
View this post on Instagram
அதைத்தொடர்ந்து தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து தன்னுடைய திருமண நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது அஜித், ஷாலினி இருவரும் தங்களின் திருமண நாளை எளிமையாக கொண்டாடினாலும் அந்த வீடியோவில் இருவரும் கேக் வெட்டி மாறி மாறி ஊட்டி விடுவதை பார்க்கும்போது, ‘என்ன ஒரு லவ்லி வீடியோ’ என்று சொல்ல தோன்றுகிறது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.