நடிகர் அஜித் திடீரென சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் அஜித் அவசர அவசரமாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துவிட்டு கார் பந்தயத்தில் தனது அணியினருடன் இணைந்து கலந்து கொண்டார். அந்த வகையில் துபாய், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் அஜித். இதற்கிடையில் குட் பேட் அக்லி திரைப்படமும் கடந்த ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகி 3வது வாரமாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் திடீரென ரேஸ் களத்திலிருந்து சென்னை திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இன்று (ஏப்ரல் 24) அஜித் – ஷாலினியின் 25வது திருமணநாள் என்பதால் அதை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சென்னை திரும்பி உள்ளாராம் அஜித். கடந்த 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் படப்பிடிப்பின் போது மலர்ந்த அஜித்- ஷாலினியின் காதல் 2000ஆம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. அதன் பிறகு தன்னுடைய மகள் மற்றும் மகனும் நேரம் செலவிட்டு தங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் அஜித்- ஷாலினி தம்பதி.
குறிப்பாக சினிமாவில் உள்ள பலரும் விவாகரத்திற்காக நீதிமன்ற வாசலில் வரிசையில் நிற்கும் இந்த காலத்தில் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், நம்பிக்கைகுரிய தம்பதியாகவும் திகழ்கிறார்கள். இந்நிலையில் இவர்களின் 25வது திருமண நாளான இன்று ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.