spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுத்தமழை.. திரிஷாவின் நடனம்.. பத்தி எரியுதே..கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

முத்தமழை.. திரிஷாவின் நடனம்.. பத்தி எரியுதே..கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

-

- Advertisement -

“முத்தமழை ” பாடலின் வீடியோ பாடலினை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி ஒரு சில மணிநேரத்திற்குள் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன் வைரலாகி வருகின்றது. மேடையில் திரிஷா பாடி நடனமாடுவது போன்று அமைந்துள்ளது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

we-r-hiring

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்,திரிஷா,அபிராமி நடிப்பில் வெளியான படம் தக்லைஃப். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளது. 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட தக்லைஃப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை.

ரசிகர்களிடையே அதிக வரவேற்பினை பெற்ற முத்தமழை பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்பதும் படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. ‘முத்த மழை’ பாடலை திரைப்படத்தில் உண்மையாக பாடியிருந்தது பாடகி தீ தான். இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாத நிலையில் தெலுங்கில் இந்த பாடலை பாடியிருந்த சின்மயி தமிழ் வெர்ஷனை மேடையில் பாடி இருந்தார்.

இதை அடுத்து தீ வெர்ஷன் நன்றாக இருக்கிறது, சின்மயி வெர்ஷன் தான் நன்றாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். முத்தமழை பாடல் படத்தில் எப்படி படமாக்கப்பட்டிருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஆனால் படம் வெளியான போது முத்த மழை பாடலே இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாடலை யூட்யூபிலாவது வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முத்த மழை பாடலின் வீடியோ வெர்சன் வெளியானது. மேடையில் திரிஷா பாடுவது போல அந்த பாடல் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பாடலின் மேக்கிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.

எப்பேர்ப்பட்ட பாடலை மணிரத்னம் இப்படி படமாக்கியிருக்கிறாரே.. என கடுமையாக விமர்சிக்கின்றனர். மேலும் எந்தவித சலனமும் இன்றி திரிஷா மேடையில் அங்கும் இங்கும் மைக்கை வைத்துக்கொண்டு நடக்கிறார் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளனர். மேடையில் பாடிய சின்மயி கூட அருமையாக எக்ஸ்பிரஷன் கொடுத்த நிலையில் திரிஷா என்னமோ ஏதோ ஒன்று இருப்பதாக கடுமையாக விமர்சிக்கின்றனர்.

செத்தவன் கையில வெத்தல கொடுத்தது மாதிரி கையில திரிஷா மைக்கை பிடிச்சுட்டு பாடுது. தீ -யின் குரல் திரிசாவுக்கு பொருந்தவே இல்லை. அடித்தொண்டையில குரலெடுத்து வார்த்தையை அழுத்தி, அகலமாய் வாய் திறந்து தீ பாட, மென்மையா உதடு திறந்து திரிசா பாவனை காட்டுது. இந்த பாட்ட தக் லைப் படத்துல பார்க்க வந்து ஏமாந்து நொந்து, சின்மயி ஆடியோ லாஞ்ச்சில் பாடுனத கேட்டு, வீடியோவில் பார்த்து சந்தோசமா போயிட்டிருந்தோம். இப்போ அதுலயும் மண்ணை அள்ளி போட்டு விட்டார் மணிரத்னம் என்று புலம்புகின்றனர் ரசிகர்கள்.

டைரக்டர் மணிரத்னம், நடிகர் கமலஹாசன் பெரு மதிப்பு வைத்திருந்த ரசிகர்களின் மனசும், வயிறும் தக் லைப் படத்தாலயும், நேத்து ரிலீஸ் பண்ணுன முத்தமழை வீடியோ பாட்டாலயும் பத்திகிட்டு எரியுது என்றும் படத்தின் ஒரே ஆறுதல் ஏஆர் ரகுமான் மட்டும்தான் எனவும் மற்ற அனைவரும் சொதப்பிவிட்டார்கள் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

MUST READ