Homeசெய்திகள்சினிமாகாத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது 'துரந்தர்-2' தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

-

- Advertisement -

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான ‘துரந்தர்-2’ (Dhurandhar: The Revenge), நாளை (மார்ச் 21) தமிழகம் முழுவதும் தமிழ் மொழியில் வெளியாகிறது.காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது 'துரந்தர்-2' தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த மார்ச் 19-ம் தேதியே இப்படம் இந்தி மொழியில் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகிறது. இருப்பினும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள பதிப்புகளுக்கான தணிக்கை சான்றிதழ் (CBFC) பெறுவதில் ஏற்பட்ட சிறு காலதாமதம் மற்றும் டப்பிங் பணிகளால், தென் மாநிலங்களில் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர்.

we-r-hiring

நாளை முதல் அதிரடி ஆரம்பம்
தற்போது அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டு, படத்திற்கு தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. இன்று (மார்ச் 20) மாலை முதலே சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் தொடங்கினாலும், நாளை (சனிக்கிழமை, மார்ச் 21) முதல் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் தமிழ் பதிப்பு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.

இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங்குடன், திறமையான நடிகர்களான ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் பாகம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவான இரண்டாம் பாகம் இந்தி பதிப்பில் வெளியான முதல் நாளிலேயே சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நேர்மையான உளவுத்துறை அதிகாரியின் விறுவிறுப்பான பழிவாங்கும் கதையாகவும், தேசபக்தி உணர்வைத் தூண்டும் பிரம்மாண்ட ஆக்ஷன் திரைக்கதையாகவும் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தி பதிப்பை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருவதால், தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.

“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் மிரளவைக்கும் – ” கேம் பிளே“ வின் ஃபர்ஸ்ட் லுக் பொஸ்டர்…

MUST READ