தமிழ் திரைப்பட உலகில் மீண்டும் ஒரு பெரும் எதிர்பார்பை கிளப்பும் வகையில், இயக்குநர் மணிரத்தனம் தனது புதிய திரைப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படம் இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய்பல்லவி முதன்முறையாக நடிக்க உள்ளார், இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தற்பொழுது அவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்துள்ளார்.
மணிரத்னம் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தக் லைஃப் திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், தனது புதிய படத்தில் அதிகம் கவனம் செலுத்தி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரோஜா படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வந்த மணிரத்னம், இந்தப் படத்திற்கு புதிய தலைமுறை இசையமைப்பாளரை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தந்தை ஆனார் தினேஷ் கார்த்திக்: மகளுக்கு ‘ராஹா’ எனப் பெயரிட்டு மகிழ்ந்த தம்பதி!
