Homeசெய்திகள்சினிமாஉலக நாயகன் கமல்ஹாசனுக்கு 'பைடி ஜைராஜ்' விருது: தெலங்கானா அரசு கௌரவம்!

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜைராஜ்’ விருது: தெலங்கானா அரசு கௌரவம்!

-

- Advertisement -

தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு 'பைடி ஜைராஜ்' விருது: தெலங்கானா அரசு கௌரவம்!

we-r-hiring

இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞரான கமல்ஹாசனுக்கு, தெலங்கானா அரசு ‘பைடி ஜைராஜ் (Paidi Jairaj) இந்தியத் திரைப்பட ஆளுமை’ விருதை வழங்கி கௌரவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் (HITEX) கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற பிரம்மாண்டமான ‘தெலங்கானா கட்டர் (Gaddar) திரைப்பட விருதுகள் 2025’ விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி, நடிகர் நாகார்ஜுனா முன்னிலையில் கமல்ஹாசனுக்கு இந்த விருதினை வழங்கினார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் கமல்ஹாசன் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு 'பைடி ஜைராஜ்' விருது: தெலங்கானா அரசு கௌரவம்!

கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான பேச்சு
விருதைப் பெற்றுக்கொண்ட பின் மேடையில் உரையாற்றிய கமல்ஹாசன், புரட்சிக் கவிஞர் கட்டர் பெயரில் இந்த விருது வழங்கப்படுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். அவர் பேசுகையில்:

“நான் 16 வயதிலிருந்தே ஹைதராபாத்தில் பணியாற்றி வருகிறேன். மொழிகளைக் கடந்து சினிமா என்பது ஒன்றுதான் (One Cinema, Indian Cinema). பிராந்திய எல்லைகளைத் தகர்த்து இந்திய சினிமாவைப் புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றதில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் முயற்சி பாராட்டுக்குரியது.”உலக நாயகன் கமல்ஹாசனுக்கு 'பைடி ஜைராஜ்' விருது: தெலங்கானா அரசு கௌரவம்!

இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி (NTR தேசிய விருது), நாகார்ஜுனா, ராம் சரண், நாக சைதன்யா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனது நீண்ட கால நண்பரும் இயக்குநருமான சிங்கீதம் சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் வர முடியாத சூழலில், அவருக்கான ‘பி.என். ரெட்டி’ விருதையும் கமல்ஹாசன் மேடையில் பெற்றுக்கொண்டார்.

தெலங்கானா அரசு முந்தைய ‘நந்தி’ விருதுகளின் பெயரை மாற்றி, மறைந்த நாட்டுப்புறப் பாடகர் மற்றும் புரட்சியாளர் கட்டர் (Gaddar) நினைவாக இந்த விருதுகளை வழங்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா அரசின் இந்த அங்கீகாரம், கமல்ஹாசனின் கலைப்பயணத்திற்குச் சூட்டப்பட்ட மற்றுமொரு மகுடமாகப் பார்க்கப்படுகிறது.

“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் மிரளவைக்கும் – ” கேம் பிளே“ வின் ஃபர்ஸ்ட் லுக் பொஸ்டர்…

MUST READ