spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா100 குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை பிரித்து கொடுக்கப் போகிறேன்... விஜய் தேவரகொண்டா அறிவிப்பு!

100 குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை பிரித்து கொடுக்கப் போகிறேன்… விஜய் தேவரகொண்டா அறிவிப்பு!

-

- Advertisement -

தனது சம்பளத்தில் ஒரு கோடியை 100 குடும்பங்களுக்கு கொடுக்க இருப்பதாக விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் குஷி திரைப்படம் வெளியாகி உள்ளது. கீதா கோவிந்தம் படம் போலவே இந்தப் படமும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

we-r-hiring

விஜய் தேவரகொண்டாவின் சினிமா கேரியரில் குஷி படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் வெற்றி விழா விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

அதில் விஜய் தேவரகொண்டா சில குடும்பங்களுக்கு பரிசளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.  குஷி படத்தில் தனக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு கோடியை தேர்ந்தெடுக்கப்படும் 100 குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குஷி படத்தின் எனது சம்பளத்தில் இருந்து 1 கோடி ரூபாயை உங்கள் குடும்பங்களுக்குக்கு பரிசளிக்க இருக்கிறேன். விரைவில், 100 குடும்பங்களை தேர்வு செய்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்குவேன். மக்கள் மனதில் உருவாகும் அந்த மகிழ்ச்சியை நான் வெளியிடுவேன். நான் கொடுக்கும் பணம் உங்களுக்கு வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு உதவும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று பேசியுள்ளார்.

MUST READ