சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படமானது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. கங்குவா முதல் பாகத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க இவர்களுடன் இணைந்து கோவை சரளா, யோகி பாபு, பாபி தியோல், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் கார்த்தி, கங்குவா முதல் பாகத்தின் இறுதியில் வில்லனாக சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருக்கிறார். இரண்டாம் பாகத்தில் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு இடையிலான காட்சிகள் தான் பெரும்பாலும் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கங்குவா திரைப்படமானது 2024 அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி போன்ற பல படங்கள் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே கங்குவா படத்திற்கு போட்டியாக பல படங்கள் களமிறங்க இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த பேட்டியில், ” கங்குவா பாகம் 1 கூட தெரியாம வேணா வேற ஏதாவது படம் மோதலாம். ஆனால் கங்குவா பாகம் 2 கூட 100 சதவீதம் வேறு எந்த படமும் மோதாது” என்று தெரிவித்துள்ளார்.