Homeசெய்திகள்சினிமாமிஷன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு

மிஷன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு

-

- Advertisement -
நடிகர் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு முன்னர் ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மலையாள நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான எமி ஜாக்கன், 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.

‘மிஷன்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடைந்தது. படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று முடிந்தன. தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தந்தை சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பி தனது மகளின் உயிரைக் காப்பாற்றினாரா என்பது தான் கதைக்களம். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ