Homeசெய்திகள்சினிமாவடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து புதிய பாடலுக்கு வரவேற்பு

வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து புதிய பாடலுக்கு வரவேற்பு

-

சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து வெளியாகி இருக்கும் புதிய பாடலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கும், நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் பெயர் போனவர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோர் ஆவர். அந்த வரிசையில் இணைந்த நடிகர் சந்தானம். சின்னத்திரையில் லொல்லு சபா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் மனதை வென்று அடுத்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, என அனைத்து டாப் நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களிலும் அவர் நகைச்சுவை நடிகராக பணியாற்றி உள்ளார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தார்.

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சந்தானம் ஹீரோ வேடத்தில் மட்டும் நடித்து வருகிறார். காமெடியனாக இல்லாமல், தொடர்ந்து முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு பாகம் 2. கிக் மற்றும் 80ஸ் பில்டப் ஆகிய திரைப்படங்கள் சந்தானம் நடிப்பில் இறுதியாக வௌியானவை. தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து இரண்டாவது பாடல் புதிதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ