spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிரஞ்சீவி 157 வது படத்தில் நடிக்கும் மூன்று கதாநாயகிகள்!

சிரஞ்சீவி 157 வது படத்தில் நடிக்கும் மூன்று கதாநாயகிகள்!

-

- Advertisement -

சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சிரஞ்சீவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி தனது 157 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் வசிஷ்டா இயக்கத்திலும் இப்படம் உருவாக உள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.

we-r-hiring

பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் ஃபேண்டஸி கதை களத்தில் உருவாக இருப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

மேலும் இதில் கதாநாயகியாக நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. தற்போது இதில் அனுஷ்காவுடன் இணைந்து இன்னும் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ