கடந்த மார்ச் 27ஆம் தேதி மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் எம்புரான். இந்த படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி இந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. மேலும் இப்படம் திரைக்கு வந்து முதல் ஐந்து நாட்களுக்குள் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மலையாள சினிமாவிலேயே புதிய சாதனை படைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தை போன்ற காட்சி ஒன்று எம்புரான் படத்தில் இடம்பெற்று இருப்பதாக பல சர்ச்சைகள் கிளம்பியது. எனவே படக்குழு இந்த படத்தில் சில இடங்களில் சில காட்சிகளை வெட்டி எடுத்து மொத்தமாக மூன்று நிமிட காட்சிகளை இருக்கின்றனர்.
மேலும் இது தொடர்பாக நடிகர் மோகன்லாலும் வருத்தம் தெரிவித்திருந்தார். இருப்பினும் பாஜக நிர்வாகி ஒருவர், எம்புரான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எம்புரான் படத்தின் சில காட்சிகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் வகுப்புவாத வன்முறையை தூண்டும் விதமாகவும் இருக்கின்றன. மேலும் அதில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -