பிரபுதேவா நடிக்கும் சிங்காநல்லூர் சிக்னல் திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபுதேவா தற்போது விஜயின் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் மூன் வாக், ஜாலியோ ஜிம்கானா, பேட்ட ராப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் சிங்காநல்லூர் சிக்னல் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார் பிரபுதேவா. மேலும் கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் வெளியான ஜோ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த நடிகை பவ்யா த்ரிகா பிரபு தேவாவிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஸ்ரீமன், சுப்பிரமணியம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே எம் ராஜா இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க முத்தமிழ் படைப்பகம் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் பூஜையுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஹரிசங்கர் நாராயணன் இணைந்துள்ளதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.