Homeசெய்திகள்சினிமாபிரசாந்த் கொஞ்சம் பேர் கூட தான் அப்படி இருப்பாரு... பிரபல நடிகை ஓபன் டாக்!

பிரசாந்த் கொஞ்சம் பேர் கூட தான் அப்படி இருப்பாரு… பிரபல நடிகை ஓபன் டாக்!

-

- Advertisement -

டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரசாந்த். தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள இவர் ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார்.பிரசாந்த் கொஞ்சம் பேர் கூட தான் அப்படி இருப்பாரு... பிரபல நடிகை ஓபன் டாக்! அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி போன்ற பல படங்கள் இன்று வரையிலும் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. மேலும் இவரது நடிப்பில் கடைசியாக அந்தகன் திரைப்படம் வெளியானது. திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரசாந்த், இயக்குனர் ஹரி இயக்கத்தில் தன்னுடைய 55 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன்படி தற்காலிகமாக பிரசாந்த் 55 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் பிரசாந்த் குறித்து நடிகை கிரண் பேசியுள்ளார்.பிரசாந்த் கொஞ்சம் பேர் கூட தான் அப்படி இருப்பாரு... பிரபல நடிகை ஓபன் டாக்! அதாவது நடிகை கிரண், பிரசாந்துடன் இணைந்து வின்னர் திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே, “நான் நடிச்சதிலேயே பிரசாந்த் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர். அவர் கூட மட்டும் தான் இப்போ வரைக்கும் டச்ல இருக்கேன். நீங்களே அவர் கூட டச்ல இல்ல என்றாலும் அவரே டச்ல இருப்பார். ஏனென்றால் அவர் கொஞ்ச பேர் கூட தான் நட்பாக இருப்பார். அப்படி பிரசாந்த் யாரிடமாவது நட்பாக இருந்து விட்டால் அவருடன் எப்போதும் நட்புடன் தான் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ