பிரபலகிலும் நடிகர் ஒருவர் சிம்பு இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
திரைத்துறையில் சிறுவயதிலிருந்தே தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிம்பு. அந்த வகையில் இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது இவருடைய நடிப்புக்கு மட்டுமல்லாமல் இவருடைய குரலுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்படி இவர் பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். தற்போது இவர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். அதில் சிம்புவின் 49வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் தக் லைஃப் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் சிம்பு. இந்நிலையில் சிம்புவின் இயக்கத்தில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அதாவது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹரிஷ் கல்யாண், சிம்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் ஏறிய சிம்பு -ஹரிஷ் கல்யாணிடம் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? அதுவும் அண்ணன் தம்பியாக நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிம்பு, “நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஹரிஷ் கல்யாண், “அந்த படத்தை சிம்பு சார் இயக்கினால் நன்றாக இருக்கும். அவருடைய இயக்கத்தில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
எனவே சிம்பு – ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் இனிவரும் காலத்தில் புதிய படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.