Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபுவை தகாத வார்த்தையால் தாக்கிய ரசிகர்!

வெங்கட் பிரபுவை தகாத வார்த்தையால் தாக்கிய ரசிகர்!

-

பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு, சென்னை 600028, சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். மேலும் அஜித் நடிப்பில் இவர் இயக்கியிருந்த மங்காத்தா திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது.வெங்கட் பிரபுவை தகாத வார்த்தையால் தாக்கிய ரசிகர்! இந்நிலையில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் -The Greatest Of All Time (GOAT) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் படமானது டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபுவை தகாத வார்த்தையால் தாக்கிய ரசிகர்!அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழுவினர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தனர். அடுத்ததாக GOAT படத்தின் மற்ற அப்டேட்டுகள் இப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் எக்ஸ் பக்கத்தில் ரசிகர் ஒருவர், GOAT படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை தகாத வார்த்தையில் குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, “சொல்லலாம் என்று நினைத்தேன் இதற்கு மேல் எப்படின்னு நீங்களே சொல்லுங்கள்” என்று பதிலளித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ