Homeசெய்திகள்சினிமா'டெவில்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘டெவில்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

டெவில் படத்தின்  ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விதார்த் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் டெவில். இந்தப் படத்தில் விதாரத்துடன் இணைந்து நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜன்னல் ஓரம், கொடி வீரன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் விதார்த் மற்றும் பூர்ணா ஆகியோரின் கூட்டணி டெவில் திரைப்படத்தில் இணைந்திருந்து குறிப்பிடத்தக்கது.'டெவில்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இந்த படத்தை சவரக்கத்தி படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசை அமைத்திருந்தார். கார்த்திக் முத்துக்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய எஸ் இளையராஜா இதன் எடிட்டிங் பணிகளை கவனித்திருந்தார். மாருதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் விதார்த் மற்றும் பூர்ணா உடன் இணைந்து த்ரிகுன், சுபஶ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் திரைப்படம் வருகின்ற மார்ச் 8ஆம் தேதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை டென்ட் கொட்டா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

MUST READ