Homeசெய்திகள்சினிமாஎம். ராஜேஷின் அடுத்த படத்தில் அதர்வா..... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

எம். ராஜேஷின் அடுத்த படத்தில் அதர்வா….. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் எம். ராஜேஷ், ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர்.எம். ராஜேஷின் அடுத்த படத்தில் அதர்வா..... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! அதைத்தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட கலகலப்பான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்நிலையில் எம் ராஜேஷ், ஜெயம் ரவி நடிப்பில் ப்ரதர் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை 2024 கோடை விடுமுறையில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

அடுத்ததாக எம். ராஜேஷ் அதர்வா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக ஏற்கனவே பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதன்படி இந்த புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் எம் ராஜேஷ், அதர்வா கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை ஸ்ரீவாரி ஃபிலிம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கப் போவதாகவும் சுகுமார் ஒளிப்பதிவு செய்யப் போவதாகவும் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த படம் எம் ராஜேஷின் மற்ற படங்களைப் போல காமெடி கலந்த கதை களத்தில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆக்சன் படங்களில் நடித்து வந்த அதர்வாவிற்கு இந்த படம் வேறொரு அனுபவத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த படத்தின் மூலம் நடிகர அதர்வா தரமான கம்பேக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ