ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ், தனது பிரம்மாண்ட படைப்பான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தைப் புதிய கூடுதல் காட்சிகளுடன் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ (AVENGERS: ENDGAME ENCORE) என்ற பெயரில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் மீள வெளியிட (Re-release) உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் பில்லியன் கணக்கில் வசூல் சாதனை படைத்த இத்திரைப்படம், மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் (MCU) மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தற்போது மார்வெலின் அடுத்த கட்ட கதைக் களமாக உருவாகி வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படத்திற்கு முன்னோட்டமாகவும், இரண்டு கதைகளுக்கும் இடையே வலுவான பாலத்தை உருவாக்கும் வகையிலும் இந்த மறுவெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.


4 நிமிட சிறப்பு இணைப்பு மற்றும் புதிய காட்சிகள்
செப்டம்பர் 25-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள இந்த ‘என்கோர்’ பதிப்பில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ கதையுடன் நேரடியாகத் தொடர்புடை 4 நிமிட சிறப்புக் காட்சிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ள இப்படத்தின் இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் (Russo Brothers), “வரவிருக்கும் ‘டூம்ஸ்டே’ திரைப்படத்தின் கதைக் களத்தையும் கதாபாத்திரங்களின் பரிணாமத்தையும் ரசிகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த ரீ-ரிலீஸ் திரைப்படம் ஒரு மிக முக்கியமான இணைப்புப் பாலமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு அம்சங்கள் மற்றும் முன்பதிவு
IMAX தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட வண்ணங்கள் மற்றும் துல்லியமான ஒலியமைப்புடன் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை முன்னிட்டு, ரசிகர்கள் கவரும் வகையில் ‘ஐரன் மேன்’ ஹெல்மெட் மற்றும் ‘நானோ காண்ட்லெட்’ வடிவத்திலான சிறப்பு பாப்கார்ன் பக்கெட்டுகளையும் திரையரங்க நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான உலகளாவிய டிக்கெட் முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டு, சினிமா ரசிகர்கள் மற்றும் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
செப்டம்பர் 1 முதல் முடங்கும் தமிழ் சினிமா? தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவின் பின்னணி!
