- Advertisement -
கதிர் நடிக்கும் புதிய இணைய தொடர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர். விக்ரம் சுகுமாறன் இயக்கிய மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் கதிர். முதல் படத்திலேயே கோலிவுட்டில் பிரபலம் அடைந்த கதிர் அடுத்து கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு, பிகில், ஜடா, சர்பத் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் கதிருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.


இடையே பிகில் படத்தில் விஜய் நண்பராகவும் நடித்திருப்பார். தொடர்ந்து கதிர் நடிப்பில் அண்மையில் வெளியான சுழல் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மாணவன் என்ற திரைப்படத்தில் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். எஸ்.எல்.எஸ்.ஹென்றி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது.



