நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் கடந்த மே 26 மற்றும் 27 தேதிகளில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்திய சினிமாவின் பொக்கிஷமாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். 60 ஆண்டுகளாக நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்.
கமல்ஹாசன் தனது ஆறு வயதிலேயே ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அந்தப் படத்தின் சிறந்த நடிகருக்கான ஜனாதிபதி விருதை பெற்றார். அபூர்வ ராகங்கள் படத்திற்காக முதல் பிலிம்ஃபேர் விருது பெற்றார். அதைத்தொடர்ந்து மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், தேவர் மகன் உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 225 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் மகாநதி, அவ்வை சண்முகி, தசாவதாரம், தெனாலி, விருமாண்டி, அன்பே சிவம், விக்ரம் உள்ளிட்ட படங்களில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2014ல் பத்மபூஷன் விருதையும், 2016ல் செவிலியர் விருதையும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு சாதனைகள் புரிந்த கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் கையால் வழங்கப்பட்டது.


