spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎல்லா தியேட்டரிலும் அனுமனுக்காக ஒரு சீட்… ஆதிபுருஷ் படக்குழுவினரின் புதிய முயற்சி!

எல்லா தியேட்டரிலும் அனுமனுக்காக ஒரு சீட்… ஆதிபுருஷ் படக்குழுவினரின் புதிய முயற்சி!

-

- Advertisement -

ஆதிபுருஷ் படத்திற்காக அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்கு ஒரு சீட் காலியாக விடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.

பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற வரலாற்று சரித்திர படம் உருவாகி வருகிறது. படத்தில் பாலிவுட் நடிகை க்ரித்தி சானோன் சீதையாக நடித்துள்ளார். சைப் அலி கான் வில்லனாக நடித்துள்ளார்.

we-r-hiring

இந்தப் படத்தை இயக்குனர் ஓம்ராவத் இயக்கியுள்ளார். இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஆதிபுருஷ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் டீசர் அனைவரது எதிர்பார்ப்பையும் ஏமாற்றியது. அதையடுத்து மீண்டும் வேலை செய்து காட்சிகளை மெருகேற்றியுள்ளனர். இந்த படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும், ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்கு ஒரு சீட் காலியாக விடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர். அனுமன் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கைகளுக்கு விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

MUST READ