spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாLCU உருவான கதையில் ஒரு குறும்படம்.... உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!

LCU உருவான கதையில் ஒரு குறும்படம்…. உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

LCU உருவான கதையில் ஒரு குறும்படம்.... உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தமிழ் சினிமாவில் உருவாக்கி அதன் கீழ் தன்னுடைய படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் லோகேஷன் கைதி, விக்ரம் லியோ உள்ளிட்ட படங்கள் LCU க்கு கீழ் அடங்கும். லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கிடையில் LCU உருவான கதையை குறும்படமாக உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதுகுறித்து சமீபத்தில் பல செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி Origin of LCU என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தை நெட்டிப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் விரைவில் இந்த குறும்படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.LCU உருவான கதையில் ஒரு குறும்படம்.... உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!

we-r-hiring

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இதனை உறுதி செய்யும் விதமாக அப்டேட்டுகளை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “லியோ படத்திற்கு பிறகு இருந்த இடைவெளியில் 15 முதல் 20 நாட்கள் குறும்படம் ஒன்றை இயக்கினேன். இது அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

MUST READ