பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் தனுஷின் தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் 52 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இது பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கி உள்ள திரைப்படம் ஆகும். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது 2025 அக்டோபர் 1 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இவர்களுடன் இணைந்து அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்திருந்த ஷாலினி பாண்டே, இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதன்படி தற்போது இட்லி கடை படத்தில் ஷாலினி பாண்டேவின் கதாபாத்திரம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஷாலினி பாண்டே இப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்துள்ளாராம். அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளாராம்.
தனுஷின் ‘ராயன்’ படத்தில் துஷாரா விஜயனின் கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்பட்டது போல் ‘இட்லி கடை’ படத்தில் ஷாலினி பாண்டேவின் கதாபாத்திரம் வலுவாக வடிவமைக்கப்பட்டிருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இட்லி கடை படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.