அனிருத் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அனிருத் என்றாலே நம் நினைவுக்கு வருவது இசை, எனர்ஜி, ஸ்டைல் தான். இன்று யாருடைய பிளே லிஸ்ட்லையுமே அனிருத்தின் பாடல்கள் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு இசையினாலும், தனது எனர்ஜியான குரலாலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதாவது இன்றைய தலைமுறையினருக்கு என்ன புடிக்கும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மூட்-க்கும் ஒவ்வொரு பாட்டு ரெடி பண்ணி பட்டய கிளப்பி விடுவார். அதிலும் காதல் பாடல் என்றால் கண்கள் நனையும். மாஸ் பாடல் என்றால் வைப் ஏறும். இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் ட்ரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு தரமான இசை அமைத்து அசால்ட் செய்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் 2, விஜயின் ஜனநாயகன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஏகே 64 படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், சிம்புவின் அரசன் படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனவே வெற்றிமாறன் – சிம்பு- அனிருத் காம்போ எப்படி இருக்கும்? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சிம்புவின் 49வது படமான இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முன்னோட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இந்த முன்னோட்டத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அரசன்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த தகவல் அனிருத் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டத்தை தந்துள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.