spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்… மீண்டும் இணையும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி… எந்தப் படத்தில் தெரியுமா?

ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்… மீண்டும் இணையும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி… எந்தப் படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. காமெடி பேன்சி திரைப்படமாக வித்தியாசமான கதைகளத்தில் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார் இயக்குனர் ஏஆர்கே சரவணன்.

we-r-hiring

இந்தப் படத்தின் பாடல்கள் தற்போது வரை அனைவரின் ப்ளேலிஸ்ட்களிலும் நிறைந்து காணப்படுகிறது. இந்தப் படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி இணையவில்லை என்று நினைத்து வருத்தம் அடைந்த ரசிகர்கள் அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்ததை கொண்டாடினர் என்றால் இந்தப் படத்திற்கு மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்தனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

மரகதநாணயம் படத்தை அடுத்து சரவணன் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வீரன் திரைப்படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியாகிய அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஏஆர்கே சரவணனே இயக்க இருக்கிறாராம். இரண்டாம் பாகத்திலும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி மீண்டும் இணைவார்களா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ