சினிமா

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘ஆடு ஜீவிதம்’ பட ட்ரெய்லர் வெளியீடு!

Published by
Yoga
Share

பிரித்விராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'ஆடு ஜீவிதம்' பட ட்ரெய்லர் வெளியீடு!

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன்
பல படங்களில் பிசியாக நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் மோகன்லால் நடிப்பில் (லூசிபர் 2) எம்புரான் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதே சமயம் பல படங்களை தயாரித்தும் தருகிறார். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் – THE GOAT LIFE திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிளஸ்ஸி இயக்கியுள்ள நிலையில் விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் பென்யமின் எழுதிய தி கோட் டேஸ் (THE GOAT DAYS)  என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளஒரு சர்வைவல் படமாக தயாராகி இருக்கிறது. வேலை நோக்கத்திற்க சௌதி அரேபியாவிற்கு செல்லும் பிரத்விராஜ் அங்கு ஆடு மேய்க்கும் அடிமையாக மாற்ற படுகிறார். பின்னர் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டும் அல்லாமல் இந்திய அளவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Show comments
Published by
Yoga
Tags: Aadu Jeevitham Cinema Prithviraj trailer ஆடு ஜீவிதம் சினிமா ட்ரெய்லர் பிரித்விராஜ்