- Advertisement -
அட்லீ மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜவான். தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இத்திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் டன்கி. டாப்ஸி, விக்கி கவுஷல், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல, பாலிவுட்டின் இரு பெரும் ஸ்டார்கள் சல்மான் கான் மற்றும் அமீர் கான். இதில் சல்மான்கான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஷ்கந்தா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமீர்கானும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.




