வசூலை வாரிக்குவிக்கும் ஆவேஷம்… படக்குழு உற்சாகம்…
- Advertisement -

மலையாள மொழி மட்டுமன்றி, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வருகிறார் ஃபகத் ஃபாசில். மலையாளத்தில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் ஃபகத், தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து வேலைக்காரன், விக்ரம், இறுதியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாமன்னன் திரைப்படத்தில் அவர், ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தின் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து தெலுங்கிலும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடித்திருப்பார். தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இது தவிர, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ஆவேஷம். இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 11-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆவேஷம் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர், நடிகைகளும் பாராட்டி வருகின்றனர். இத்திரைப்படம் வரும் மே 9-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.